/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் 'மாஜி' பிரதிநிதிகள் தலையீடு
/
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் 'மாஜி' பிரதிநிதிகள் தலையீடு
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் 'மாஜி' பிரதிநிதிகள் தலையீடு
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் 'மாஜி' பிரதிநிதிகள் தலையீடு
ADDED : மே 27, 2025 12:30 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2025 ஜன. 5 உடன் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலும் முன்னாள் பிரதிநிதிகள் தலையீடு ஒப்பந்தங்களில் தொடர்கிறது.
சிறப்பு அலுவலர் பதவிக்காலத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற முடியாமல்மக்கள் அவதியை சந்தித்து வரும் சூழலில், கரைவேட்டி கட்டிக் கொண்டு ஊரக பகுதிகளில் வலம் வரும்முன்னாள் பிரதிநிகளின் ஒப்பந்த தலையீடால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் ஒப்பந்தங்களில்பதவியில் இருக்கும் போதே பிரதிநிதிகளின் உறவினர்கள் தலையிட்டு ஒப்பந்தம் எடுத்து வந்தனர். தற்போது பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், சில உள்ளாட்சி பிரதநிதிகள் அதே பந்தாவோடு ஒப்பந்தங்களில் தலையீடு செய்து வருகின்றனர். முன்பு பதவியில் இருந்த போது வந்த தலையீடுகளை விதியே என அதிகாரிகள் ஏற்கும் நிலை இருந்தது.
தற்போது சிறப்பு அலுவலர் பதவிக்காலம் என்பதால் தங்கள் சுதந்திரமாக செயல்படலாம் என நினைத்தாலும், ஆளுங்கட்சி பெயரை கூறி முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய அலுவலகங்களை வலம் வருவது அடங்கியபாடில்லை.
இவற்றில் பதவி வகித்த முன்னாள் தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஒப்பந்தங்களில் தலையீடுவது அதிகரித்துள்ளது. தங்கள் வரையறைக்குள் குறிப்பிட்ட பகுதிகள் வருவதாலும், அதிகாரிகள் தலையிட முடியாத தயங்குவதால் தங்கள் பழைய அதிகாரத்தை காட்டி துஷ்ப்ரயோகம் செய்கின்றனர். இதனால் ஊரக உள்ளாட்சிகளில் நடக்கவுள்ள பணிகளில் தலையீடு அதிகரித்துள்ளது. இவை தவிர கட்சியினர் தங்களுக்கு ஒப்பந்தம் வேண்டி முண்டியடிக்கின்றனர்.
இதனால் சிறப்பு அலுவலர் காலகட்டத்தில் நடக்கும் பணிகள் கமிஷன் அடிப்பதே குறிக்கோளாக இருப்பதால் பணிகள் தரமின்றி நடக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. போட்ட ரோடுகள் உடனே சேதமடைவது வாடிக்கையாகி வருகிறது. இதே நிலை தான் 2016-19 வரை இருந்த ஊரக உள்ளாட்சி சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலத்தில் நடந்தது.
மதிப்பீட்டை காட்டிலும் அதிகமாக ஒரு போலி திட்ட மதிப்பீடும், வேண்டியவருக்கு மதிப்பீட்டை குறைத்து காட்டி திட்டம் போடவும், முன்னாள் தலைவர்கள், அதிகாரிகள் கலந்தாலோசித்து முடிவெடுக்கின்றனர். இதனால் பதவிக்காலம் முடிந்த பின்னும் அனைத்து ஒன்றிய அலுவலகங்களும் ஒப்பந்தம், டீல் பேசவே எப்போதும் பிஸியாக உள்ளன. தவிர இது ஆட்சியின் 5வது ஆண்டு வேறு. நிறைய திட்டங்களை நிறைவேற்ற துடித்து வருகின்றனர்.
மூன்று முறை டெண்டர் விட வேண்டிய இடங்களில் ஒரு டெண்டர் விடுவது, பெண் கவுன்சிலர்களாக இருந்தவர்களின் கணவர்கள்தனி கன்ஷ்ட்ரக்ஷன் நடத்தி அங்கிருந்து மலிவு விலைபொருட்களை வாங்கி பணிகளை செய்வது போன்ற அட்டுழியங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த அதிகரித்து வரும் கொள்ளை, கமிஷனால் மக்கள் தான் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கை எடுக்காதது தான் கூடுதல் வேதனை.