ADDED : மார் 04, 2024 04:45 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நிறுவியர் நாள் விழா தொழிலதிபர் உமாபதி தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லுாரி நிர்வாகத் தலைவர் கணேசன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் ஜவஹர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். மதுரை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த கல்வி ஆண்டில் பணிநிறைவு பெறவுள்ள கல்லுாரி முதல்வர் ஜவஹர், அலுவலக கண்காணிப்பாளர் அருஞ்சுனை, நுாலகர் மாறன் நாயனாருக்கு கல்லுாரி நிர்வாகத்தினர் நினைவு பரிசுகளை வழங்கினர். இதில் பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாக புரவலர் குறளரசன், உபத் தலைவர் முருகேசன், செயலாளர் ராஜவேல், பொருளாளர் சரவணபாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
