/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி கோடவுனில் ரூ.6 லட்சம் பட்டாசுகள் திருட்டு நான்கு பேர் கைது
/
சிவகாசி கோடவுனில் ரூ.6 லட்சம் பட்டாசுகள் திருட்டு நான்கு பேர் கைது
சிவகாசி கோடவுனில் ரூ.6 லட்சம் பட்டாசுகள் திருட்டு நான்கு பேர் கைது
சிவகாசி கோடவுனில் ரூ.6 லட்சம் பட்டாசுகள் திருட்டு நான்கு பேர் கைது
ADDED : டிச 25, 2024 02:45 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டிரான்ஸ்போர்ட் நிறுவன கோடவுனில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வச்சக்காரப்பட்டி இ.குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் 35. இவருக்கு சிவகாசி அருகே பாறைப்பட்டியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. தீபாவளிக்கு விற்பனை செய்த பட்டாசுகள் போக மீதம் 100 அட்டைப்பெட்டிகள் அடங்கிய பட்டாசுகள் நிறுவனத்தில் உள்ள கோடவுனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த 100 அட்டைப்பெட்டிகளும் திருடு போனது. இது குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அருண்குமாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் வடக்கூரை சேர்ந்த சுரேஷ்குமார் 35, வேலை பார்த்து வந்தார். இவரிடம் கோடவுனின் சாவிகளும் இருந்தன.
மீனம்பட்டி அம்பேத்கர் நகர் வசந்தகுமார் 45, வினோத் குமார் 27, பால் வில்லியம் 22, ராம்குமார் 32, ஆகியோருடன் சேர்ந்து சுரேஷ்குமார் பட்டாசுகளை திருடியது தெரிந்தது. 4 பேரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷ்குமாரை தேடுகின்றனர்.