/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை ரயில்வே பாலப் பணிகள் விறுவிறு
/
நான்கு வழிச்சாலை ரயில்வே பாலப் பணிகள் விறுவிறு
ADDED : ஜூன் 24, 2025 03:08 AM

ராஜபாளையம்:ராஜபாளையம் வழியே செல்லும் நான்கு வழிச்சாலையின் ரயில்வே மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவதால் நகர் பகுதியில் ஏற்படும் தேவையற்ற நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமங்கலம்- கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை பெருமளவு முடிந்துள்ளது. இவற்றில் ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார், ராஜபாளையம் முதுகுடி அருகே ரயில்வே மேம்பால பணிகள் தாமதத்தால் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதனால் மதுரையில் இருந்து வரும் போது கிருஷ்ணன் கோவில் தொடங்கி நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை.
ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே மேம்பால பணிகள் ஓரளவு முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த முதுகுடி ரயில்வே மேம்பால பணிகள் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பாலத்திற்கான கான்கிரீட் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பணிகள் முடிவடையும் நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து முதுகுடி வரை நான்குவழிச்சாலையில் எந்த தடையும் இன்றி பயணிக்க முடியும்.
இதன் மூலம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதிகளில் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு ஏற்படும்.