/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி மோசடி
/
விருதுநகர் கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி மோசடி
விருதுநகர் கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி மோசடி
விருதுநகர் கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி மோசடி
ADDED : அக் 03, 2024 02:10 AM
விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கி மோசடி நடந்துள்ளது. விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கலெக்டர் ஜெயசீலன் பெயரில் போலியான முகநுால் கணக்கை மர்ம நபர் துவங்கியுள்ளார்.
அதில் கலெக்டருக்கு பிறந்த நாள் என நினைத்து வாழ்த்துக்கள் கூறிய நபரிடம், மர்ம நபர் தனது நண்பர் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தற்போது பணியிட மாறுதல் பெற்றுள்ளதால் வீட்டு உபயோகப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய இருப்பதாகவும், அலைபேசி எண்ணை கொடுத்தால் தொடர்பு கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநுால் கணக்கு துவங்கி பணம் கேட்பதாக தகவல் தெரிந்தது.
இது போன்று பல கலெக்டர்கள், உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநுால் கணக்கு துவங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது.
எனவே மக்கள் கலெக்டர் பெயரில் உள்ள போலியான முகநுால் கணக்கில் இருந்து பணம் கேட்பவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

