தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலி ஆவணம் தயாரித்து மோசடி

 போலி ஆவணம் தயாரித்து மோசடி

 போலி ஆவணம் தயாரித்து மோசடி


ADDED : ஜன 20, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசியில் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து ரூபாய் 1.64 கோடி மோசடி செய்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிவகாசியை சேர்ந்த சபியுல்லா, சாரதா நகர் கிருஷ்ணசாமி ஆகியோர் துாத்துக்குடியைச் சேர்ந்த முத்து மாரியப்பன், மாரீஸ்வரி ஆகியோருக்கு சொந்தமான சிவகாசி கருப்பண்ணன் தெருவில் உள்ள 6.5 சென்ட் இடத்தை சிவகாசி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த திவான் ஒளி 43. என்பவரிடம் ரூ. 81 லட்சத்து 90 ஆயிரத்துக்கு பேசி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

அதே பகுதியில் மீதமுள்ள 6.5 இடத்தை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த லெனின் ராம், சபியுல்லா, கிருஷ்ணசாமி, நாராயணன், சேவியர், போலீஸ் காளி, வைரமுத்து ஆகியோர் ஷாலினி என்பவருக்கு ரூ. 83 லட்சத்திற்கு பேசி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திவான் ஒளி தனது இடத்திற்கு வேலி அமைத்த போது அந்த இடம் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. திவான் ஒளி, ஷாலினி ஆகியோர் பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us