/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அசுர வேகத்தில் பறக்கும் டூவீலர்களால் பதற்றம்டூ: டூமறுவடிவமைப்புக்கு தேவை கட்டுப்பாடு
/
அசுர வேகத்தில் பறக்கும் டூவீலர்களால் பதற்றம்டூ: டூமறுவடிவமைப்புக்கு தேவை கட்டுப்பாடு
அசுர வேகத்தில் பறக்கும் டூவீலர்களால் பதற்றம்டூ: டூமறுவடிவமைப்புக்கு தேவை கட்டுப்பாடு
அசுர வேகத்தில் பறக்கும் டூவீலர்களால் பதற்றம்டூ: டூமறுவடிவமைப்புக்கு தேவை கட்டுப்பாடு
ADDED : மார் 14, 2024 03:07 AM
மாவட்டத்தில் டூவீலர், கார் விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. தினசரி இருவராவது சாலை விபத்தில் இறந்து விடுகின்றனர். குறைந்த பட்சம் ஐந்து விபத்துக்களாவது நடந்து விடுகிறது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது விதிமீறல்கள் தான். மேலும் டூவீலர்களால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம் உள்ளன.
இன்று பல இளைஞர்களுக்கு ரேஸ் வாகனங்கள் வாங்கி அதிவேகமாக ஓட்ட ஆசை. சில இளைஞர்கள் இதை சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று ரேஸ்மறுவடிவமைப்புசெய்து அதிவேகமாக செல்வதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை வடிவமைத்து கொள்கின்றனர்.
இதற்காக எவ்வித அனுமதியும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெறுவதில்லை. எப்படியாவது போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கின்றனர். இவர்கள் சாதாரண ரோடுகளில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது போன்ற விதிமீறல்களை செய்து விபத்தை ஏற்படுத்துகின்றனர். ரேஸ் அது தொடர்பான வாகனங்கள், அதற்காக டிராக்குகள் தனித்தனியே உள்ளன.
அந்த வாகனங்கள் அவற்றில் இயக்கவே தகுதியானவை. ஆனால் புரிதல் இன்றி பல இளைஞர்கள் வாகன மோகத்தில் வடிவமைப்பு செய்து சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றனர்.
இந்த கலாசாரம் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதை வட்டார போக்குவரத்து துறையும், டிராபிக் போலீசாரும் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும்.'ராஷ் டிரைவிங்' எனப்படும் அச்சுறுத்தும் வகையில்சாகசம் செய்து கொண்டு ஓட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாகனங்களில் அனுமதி பெறாமல் வடிவமைப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மக்கள் நடமாடும் வீதிகளில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது அபராத நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வை கல்லுாரிகளில் இருந்தே துவக்க வேண்டும். 17 வயது முடிந்து 18 வயது பிறக்கும் தருவாயில் உள்ள பிளஸ் டூ மாணவர்களும் சர்வசாதரணமாக டூவீலர்களில் அசுர வேகத்தில் செல்கின்றனர். அவர்களுக்கும் விழிப்புணர்வு அவசியமாகிறது. மாவட்ட நிர்வாகம் தாலுகா வாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

