UPDATED : ஜூலை 04, 2026 06:42 PM
ADDED : ஜூலை 04, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை, அருப்புக்கோட்டை சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பரிசோதனை முகாமை கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் துவக்கி வைத்தார். சார்பு நீதிபதி சதீஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவல்லி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா ஆகியோர் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராஜன், பொருளாளர் சண்முகவேல், மூத்த வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தம் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சட்டப்பணிகள் குழுவின் தன்னார்வ பணியாளர் சேகர் செய்திருந்தார்.
____
