/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் அடிக்கடி பவர் கட் தொழில் பாதிப்பால் சிரமம்
/
நரிக்குடியில் அடிக்கடி பவர் கட் தொழில் பாதிப்பால் சிரமம்
நரிக்குடியில் அடிக்கடி பவர் கட் தொழில் பாதிப்பால் சிரமம்
நரிக்குடியில் அடிக்கடி பவர் கட் தொழில் பாதிப்பால் சிரமம்
ADDED : ஜூலை 22, 2025 03:22 AM
நரிக்குடி:ஊ நரிக்குடி பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நரிக்குடியில் காலை நேரத்தில் மின்தடை செய்யப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் எந்த வேலையும் செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மற்ற நேரங்களிலும் திடீரென தடை செய்யப்படுவதால் ஓட்டல் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. தற்போது பள்ளிகளில் இடைத்தேர்வு நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காரியாபட்டியிலும் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. மின்சாரத்தை நம்பி ஏராளமான தொழில்கள் நடைபெற்று வருகின்றன. அடிக்கடி மின் தடை செய்யப்படுவதால், தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீராக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.