ADDED : செப் 20, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், ராதாகிருஷ்ணன் காலனி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 30க்கும் பெரிய விநாயகர் சிலைகள் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து என்.ஆர்.கே., ரோடு, ரத வீதிகள் வழியாக ஜக்கம்மாள் கோயில் சென்று அங்குள்ள தொட்டியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக விநாயகர், சிவன், பார்வதி, முருகன் என சுவாமிகள் வேடமிட்டு பக்தர்கள் வந்தனர்.
