/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்பு பகுதியில் தீ வைக்கப்படும் குப்பை
/
குடியிருப்பு பகுதியில் தீ வைக்கப்படும் குப்பை
ADDED : செப் 08, 2025 06:16 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கண்மாய் கரை பகுதிகளில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதால் அப்பகுதி குடியிருப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நகரில் 33 வார்டுகள் உள்ள நிலையில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள், ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது.
இவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளில் ஒரு பகுதி வடமலைக்குறிச்சி, செங்குளம்,, பெரியகுளம் கண்மாய் பகுதிகளிலும், ராமகிருஷ்ணாபுரம் தெற்கு, நடு, வடக்கு தெருக்களிலும், வாழைக்குளம் தெரு நீர்வரத்து ஓடையிலும், சந்திய கிணற்றுத் தெரு இறக்கத்திலும், நகர் எல்லைப் பகுதியிலும் தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் சுகாதாரத் கேடு, புகை மூட்டத்தால் சுவாச கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
மேலும் கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகள் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.