/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பை
/
ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பை
ADDED : நவ 06, 2024 05:49 AM

சிவகாசி : சிவகாசி அருகே தாயில்பட்டியில் இருந்து பேர்நாயக்கன் பட்டி செல்லும் வழியில் ரோட்டோரத்தில் குப்பையை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே தாயில்பட்டியிலிருந்து பேர் நாயக்கன்பட்டி செல்லும் வழியில் ஊராட்சி சார்பில் ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றது. இப்பகுதியில் பட்டாசு ஆலைகள், கடைகள் உள்ளன. இதனால் எப்பொழுதும் வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் ரோட்டோரத்தில் கொட்டப்பட்ட குப்பை அங்கேயே எரிக்கப்படுகின்றது.
இதிலிருந்து எழும்பும் புகை வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. வாகன ஓட்டிகளுக்கு புகையால் கண்கள் மறைக்கப்படுவதால் விபத்தில் சிக்குகின்றனர். காற்றடிக்கும் போது குப்பை பறந்து ரோட்டிற்கு வந்து விடுகின்றது. மேலும் அப்பகுதி முழுவதுமே சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது.
தவிர ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தங்கள் உணவிற்காக தீ எரிக்கும் போது குப்பையில் நடமாடி காயமடைகின்றது. எனவே இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எரிப்பதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.