/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுா லகத்திற்கு முன் குப்பை வண்டிகள்
/
நுா லகத்திற்கு முன் குப்பை வண்டிகள்
ADDED : ஜூலை 13, 2025 12:15 AM

திருச்சுழி,: திருச்சுழி அருகே கல்லூரணியில் நூலகத்திற்கு முன்பு குப்பை வண்டிகளை நிறுத்துவதால் அங்கு வரும் வாசகர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூரணியில் கிளை நூலகம் உள்ளது. இங்கு காலை, மாலை நேரங்களில் முதியோர்கள், இளைஞர்கள் படிக்க வருவர். நூலகத்தின் அருகில் காலியாக இருக்கும் இடத்தில் ஊராட்சியில் பயன்படுத்தப்படும் குப்பை வண்டிகளை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். சில வண்டிகளில் குப்பைகளோடு நிறுத்துவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் முகம் சுளிக்கின்றனர்.
இதனால் நூலகத்திற்கு வர வாசகர்கள் தயங்குகின்றனர். நூலகத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என அக்கறை காட்டும் அரசு, இது போன்ற செயல்களால் மக்கள் வர யோசிக்கும் நிலை ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நூலகத்திற்கு முன்பு குப்பை வண்டிகளை நிறுத்தாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என ஊராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.