ADDED : ஆக 16, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். துணை தலைவர் ஸ்ரீகண்டன் ராஜா தலைமை வகித்தார்.
புதிய தலைவராக ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா, துணை தலைவர்களாக ஸ்ரீகண்டன் ராஜா, பத்மநாபன், செயலாளர்களாக வெங்கடேஸ்வர ராஜா, ஆடிட்டர் நாராயணசாமி இணைச் செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக ராமராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா விருந்தினர் அறிமுகம் செய்தார்.
விருதுநகர் வியாபார சங்க தலைவர் யோகன் பங்கேற்று பேசினார்.
செயற்குழு உறுப்பினர் ராஜவேல் நன்றி கூறினார்.
