/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை
/
காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை
காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை
காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை
ADDED : அக் 01, 2025 07:34 AM

விருதுநகர் : விருதுநகர் கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 21. இவர் பத்தாம் வகுப்பு முடித்து அருப்புக்கோட்டையில் தனியார் கல்லுாரியில் கேட்டரிங் முடித்து சென்னையில் பணிபுரிந்தார். இவர் நான்கு நாட்கள் விடுமுறைக்காக விருதுநகருக்கு வந்தவர், காதலியுடன் பேச முயன்றார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் காதலி பேச மறுத்து விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு சென்னை செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டார்.
மதுரையில் இருந்து புனலுார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முத்துராமன்பட்டி தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ரயிலில் விழுந்து தற்கொலை செய்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.