/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க மணி கண்டெடுப்பு
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க மணி கண்டெடுப்பு
ADDED : ஏப் 03, 2025 01:36 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டது.
இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 22 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 4400 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
வெம்பக்கோட்டை 3 ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.