ADDED : ஆக 13, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: மதுரை மாவட்டம் திருமங்கம் கரிசல்பட்டியை சேர்ந்தவர் சரவணக்கண்ணன், அவரது மகள் அபர்ணா 16. இருவரும் திருமங்கலம் அருகே 2022ல் பிப்.11 மாலை 6:30 மணிக்கு நடந்த விபத்தில் அரசு பஸ் மோதி காயமடைந்தனர். இவர்களுக்கு இழப்பீடாக அரசு போக்குவரத்துகழகம் விருதுநகர் கிளை மேலாளர் ரூ.1.47 லட்சம் வழங்க விருதுநகர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றம் உத்தரவின்படி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை கொடுக்காததால் பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
