/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணர் பஜாரில் இட நெருக்கடி அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்
/
மல்லாங்கிணர் பஜாரில் இட நெருக்கடி அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்
மல்லாங்கிணர் பஜாரில் இட நெருக்கடி அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்
மல்லாங்கிணர் பஜாரில் இட நெருக்கடி அடிக்கடி விபத்தில் சிக்கும் அரசு பஸ்
ADDED : ஜூலை 08, 2025 01:15 AM

காரியாபட்டி: மல்லாங்கிணர் பஜாரில் இட நெருக்கடியால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல இடமில்லாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மல்லாங்கிணர் பஜார் வழியாக கல்குறிச்சி --- விருதுநகருக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. பஜாரில் எப்போதும் மக்கள் கூட்டம், ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருவது என நெருக்கடியான சூழ்நிலை இருந்து வருகிறது.
இரு புறங்களிலும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை ரோட்டில் நிறுத்துவதால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வாகன நெருக்கடி, மக்கள் கூட்டம் இருக்கும். இந்நிலையில் பஜார் வழியாக பிரதான வாறுகால் கட்டப்பட்டது. ஆக்கிரமிப்பு சரிவர அகற்றாமல் ரோட்டோரத்தில் கட்டப்பட்டதால் இரு வாகனங்கள் விலகி செல்லும் போது வாறுகால் மீது வாகனம் ஏறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது கட்டப்பட்ட வாறுகால் மீது காங்கிரீட் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
அதில் வாகனம் ஏறிச் செல்ல முற்படும் போது அடிக்கடி உடைந்து வாகனங்கள் சிக்கிக் கொள்கிறது. இது போன்று பலமுறை இரு வாகனங்கள் விலகும் போது வாறுகாலில் அரசு டவுன் பஸ் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாற்று வழி கிடையாது. மற்ற வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.