/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிபோதையில் பஸ் ஓட்ட வந்த அரசு டிரைவர் --
/
குடிபோதையில் பஸ் ஓட்ட வந்த அரசு டிரைவர் --
ADDED : டிச 04, 2025 01:36 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் மேட்டுப்பாளையம் புறப்பட இருந்த அரசுபஸ்சின் டிரைவர் போதையில் இருந்ததால், பயணியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வேறு டிரைவர் மூலம் அந்த பஸ் இயக்கப்பட்டது.
ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை மேட்டுப் பாளையத்திற்கு செல்லும் பஸ், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தது.
பஸ் புறப்பட சிறிது நேரம் இருந்த நிலையில், டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருந்த டிரைவர் பாலமுருகன், எவர் சில்வர் டம்ளரில் ஊற்றி, காபி போல பிறர் நினைத்துக் கொள்வர் என கருதி, மது அருந்திக் கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையை பின்னால் இருந்து கண்காணித்த பயணியர் சிலர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பஸ்சில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பணிமனை மேலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட அலுவலர்கள், பயணியருடன் பேச்சு நடத்தி, ஒரு மணி நேரத்திற்குப் பின் மாற்று டிரைவரை ஏற்பாடு செய்தனர். அதன் பின், அந்த பஸ்சை, மாற்று டிரைவர் வாயிலாக, மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்தனர்.

