ADDED : ஜூலை 26, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையம் சென்னையில் நடத்தி வரும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருதுநகரில் அதன் மாவட்ட மையம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிதி காப்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபால், மாநில பொருளாளர் புகழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட அந்தோணிராஜ் பேசினர். வளாகக் கிளை தலைவர் கண்ணன் நன்றிக்கூறினர்.