தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு ஊழியர்கள் ஊர்வலம்

அரசு ஊழியர்கள் ஊர்வலம்

அரசு ஊழியர்கள் ஊர்வலம்


ADDED : ஏப் 18, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் முறையான ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊர்வலம் நடத்தினர்.

எம்.ஜி.ஆர்., சிலை முதல் தேசபந்து மைதானம் வரை நடந்த பேரணிக்கு மாவட்ட இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வைரவன் கோரிக்கைகளை விளக்கினார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us