தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசு மெத்தனம்

 கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசு மெத்தனம்

 கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசு மெத்தனம்


ADDED : பிப் 18, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: பிப். 18- -: அருப்புக்கோட்டை, ராஜபாளையம், நரிக்குடி பகுதிகளில் பருத்தி, நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதில் அரசு மெத்தனம் காட்டுகிறது, என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., மாரிமுத்து தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

ஜனார்த்தனன், அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைகளில் கோபாலபுரம் சந்திப்பு, விருதுநகர் ரோடு சந்திப்பு,சுக்கிலநத்தம் ரோடு சந்திப்புகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும்.

சிவசாமி, முடுக்கன்குளம்: கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் அதிக அளவு திருட்டு நடக்கிறது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்சிங், பரளச்சி: வரலட்சுமி பகுதியில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் புதிதாக ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில், அரசு 3,460 மீட்டர் ரோடு அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 3 ஆயிரம் மீட்டருக்கு மட்டுமே ரோடு அமைக்கப்படுகிறது. ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதித்தநேந்தல் அரசு விவசாய பண்ணையில் தோட்டக்கலை மூலம் விவசாயிகளுக்கு தக்காளி நாற்று குறைவாக வழங்கப்பட்டது.

இனி வருங் காலங்களில் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபாலகிருஷ்ணன், நரிக்குடி: திருச்சுழி நரிக்குடி ஒன்றியங்களில் நெல் கொள்முதல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஆர்.டி.ஓ., தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

ராம்பாண்டியன், விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்: மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் மூலம் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதிகளில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என 6 மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை பகுதிகளில் அதிக அளவு பருத்தி விவசாயம் தற்போது நடந்து வருகிறது.

ஆனால் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருப்புக்கோட்டையில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

செல்வம், பரளச்சி: நரிக்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பலமுறை அறிவுறுத்தியும் நடவடிக்கை இல்லை உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us