/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் வருவாய் இழப்புக்கு தீர்வு தேவை
/
வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் வருவாய் இழப்புக்கு தீர்வு தேவை
வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் வருவாய் இழப்புக்கு தீர்வு தேவை
வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் வருவாய் இழப்புக்கு தீர்வு தேவை
ADDED : ஜன 03, 2024 05:34 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசுத்துறை அலவலகங்களால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டாலும் அதில் நிறைய அலுவலகங்கள் இடம் பெறுமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி விறுவிறுவென நடந்து வருகிறது. இந்நிலையில் பல அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
குறிப்பாக மீன்வளத்துறை அலுவலகம், குடிநீர் வடிகால் வாரியம், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, நான்கு வழிச்சாலை நில எடுப்பு டி.ஆர்.ஓ., அரசு அருங்காட்சியகம் ஆகியவை வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன.
இவை ஒவ்வொன்றிற்கும் ரூ.10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வாடகை கொடுக்கின்றனர்.
புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டால் அதில் வாடகை கட்டடங்களில் உள்ள கட்டடங்களுக்கு இடம் கிடைக்குமா என்பது உறுதி இல்லை. இருப்பினும் ஆறு மாடியாக அமைவதால் வாய்ப்புள்ளது.
எஸ்.பி., அலுவலகத்திலும் கூடுதல் கட்டடங்கள் கட்டினால் பொருளாதார குற்றப்பிரிவு, குடிமைபொருள் குற்றப்பிரிவு ஸ்டேஷன்களை அங்கே அமைக்க முடியும்.
இதன் மூலம் அரசுக்கு தேவையற்ற வருவாய் இழப்பு தவிர்க்கப்படும்.
மேலும் வாடகை கட்டடங்களில் செயல்படும் இந்த அலுவலகங்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் குற்றவியல் நடவடிக்கைகள், டெண்டர் விடும் நேரங்களில் பதற்றம் ஏற்படுகின்றன. அருங்காட்சியகத்திற்கு இடம் ஒதுக்கியும் தற்போது வரை பணிகள் துவங்காமல் உள்ளது.
அதே போல் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களும் சில பள்ளிகளில் இயங்கி வருகின்றன. ரேஷன் கடைகள், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்களும் வாடகை கட்டடங்களில் அதிகளவில் இயங்கி வருகின்றன.
அதற்கும் மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.