/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு திட்டப்பணிகள் ஆய்வுக்கூட்டம்
/
அரசு திட்டப்பணிகள் ஆய்வுக்கூட்டம்
ADDED : அக் 01, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஷஜீவனா தலைமையில் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் நடந்தது.
இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், திட்ட இயக்குனர்கள் கேசவதாசன், ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா உள்பட பலர் பங்கேற்றனர்.