/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயறு, பருப்பு வகைகளுக்கு அரசுகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
/
பயறு, பருப்பு வகைகளுக்கு அரசுகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
பயறு, பருப்பு வகைகளுக்கு அரசுகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
பயறு, பருப்பு வகைகளுக்கு அரசுகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
ADDED : பிப் 11, 2025 04:40 AM
சாத்துார்: பயறு, பருப்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு மத்திய மாநில அரசுகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என மானாவாரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் பருவ மழையை நம்பி உளுந்து பாசிப்பயறு, எள், துவரை, கேழ்வரகு, கம்பு சோளம், மக்காச் சோளம் தட்டாம்பயறு,உள்ளிட்ட பயறு மற்றும் பருப்பு வகைகளை விளைவித்து வருகின்றனர்.
மானா வாரி நிலத்தில் பயிர் செய்யப்படும் இந்த பயறு உளுந்து ஆகிய பயிர்களுக்கு தனியாரே விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் உரிய லாபம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.
மானாவாரி விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மானாவாரி நிலத்தில் விளைவிக்கப்படும் பயறு, பருப்பு வகைகளுக்கு மத்திய மாநில அரசுகளே விலை நிர்ணயம் செய்வதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும் விவசாயிகளும் பயனடைவார்கள். மத்திய மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட மானாவாரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.