/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆன்லைன் பட்டாசு விற்பனையை அரசுகள் தடுக்க வலியுறுத்தல்
/
ஆன்லைன் பட்டாசு விற்பனையை அரசுகள் தடுக்க வலியுறுத்தல்
ஆன்லைன் பட்டாசு விற்பனையை அரசுகள் தடுக்க வலியுறுத்தல்
ஆன்லைன் பட்டாசு விற்பனையை அரசுகள் தடுக்க வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 01:01 AM
சிவகாசி:''நீதிமன்ற உத்தரவுப்படி ஆன்லைன் பட்டாசு விற்பனையை முற்றிலுமாக தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகர், பொதுச் செயலாளர் இளங்கோவன் சிவகாசியில் கூறியதாவது:
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆன்லைன் பட்டாசு விற்பவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பட்டாசு கடை, விற்பனை உரிமம், ஜி.எஸ்.டி., பதிவு இல்லாமல் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பட்டாசு கடைகளை மாவட்ட நிர்வாகம் வரைமுறை படுத்த வேண்டும். ஆன்லைனில் விற்பனை , தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனையை கருத்தில் கொண்டே அதிக அளவிலான புறநகர் பகுதிகளில் பட்டாசு கடைகள் திறக்கப்படுகிறது. அதிகப்படியான தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் பட்டாசு விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய மத்திய ,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.