/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு அரசு பஸ்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு அரசு பஸ்
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு அரசு பஸ்
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு அரசு பஸ்
ADDED : பிப் 13, 2024 05:34 AM
சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் பத்துக்கும் மேற்பட்ட முறை ரயில்கள் நின்று செல்கின்றன. தொழில் நகரம் என்பதால் தினமும் ஏராளமானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். தவிர இங்கிருந்து விருதுநகர், மதுரைக்கு செல்லும் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர் ரயில் போக்குவரத்தினை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ரயில்வே ஸ்டேஷனிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் ஆட்டோவில் ரூ. 200 வரை கொடுத்து வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் வசதியாக சென்று வருவதற்காக ரயிலை பயன்படுத்தியும், ரயில்வே ஸ்டேஷனுக்கு வர அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எல்.ஐ.சி., அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு வருவதற்கும் ஆட்டோவில் தான் வர வேண்டியுள்ளது. எனவே சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் நகர் பஸ்களை பைபாஸ் ரோடு, காமாக் ரோடு, ஞானகிரி ரோடு, வேலாயுதம் ரஸ்தா, ரயில்வே ஸ்டேஷன் அரசு மருத்துவமனை இரட்டைப்பாலம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல் மறு மார்க்கமாகவும் ரயில்வே ஸ்டேசன் வழியாக பஸ்சை இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அல்லது இதே வழித்தடத்தில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களையாவது இயக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.