நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்விக் குழுமங்களின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 2020- - 23ம் கல்வியாண்டில் படித்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பட்டங்கள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி தலைவர் ஸ்ரீதரன், கல்லுாரி செயலாளர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த் பேசினர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.