/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் பட்டமளிப்பு விழா
/
கலசலிங்கம் பல்கலையில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 03, 2025 04:05 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையின் 38வது பட்டமளிப்பு விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலச லிங்கம், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், எக்ஸ்கியூட்டி கவுன்சில் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
3048 இளங்கலை, 470 முதுகலை, 34 ஆராய்ச்சி துறை மாணவர்கள் உட்பட 3552 பேருக்கு பட்டங்களை வழங்கி குளோபல் டேலண்ட் கம்பெனி அதிகாரி ராமச்சந்திரன் பேசியதாவது, இந்தியா தான் 2030ல் உலக பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும். அனைத்து கணினி மென்பொருள்கள், விவசாய பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியறிவு மீது முழு நம்பிக்கை கொண்டு புதியவற்றை கண்டறிய வேண்டும் என்றார்.
டெக்மேங்கோ நிறுவன சி.இ.ஓ. ஜெயஸ்ரீ பேசினார். பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் இயக்குனர்கள், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குழுவினர் செய்திருந்தனர்.