
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா கல்லுாரி நிறுவனத் தலைவர் திருவேங்கடராமானுஜதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் ராஜா வரவேற்றார்.
இதில் கல்லுாரிச் செயலர் வெங்கடேஷ், அறக்கட்டளைத் தலைவர் கோதை ஆண்டாள், ஸ்ரீ வித்யா கல்வி குழுமங்களின் முதல்வர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும் 2021 -- 2023ம் ஆண்டு பி.எட்., 2020 - - 2022ம் ஆண்டில் எம்.எட்., பயின்ற மாணவர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலை டீன் (பொறுப்பு) கண்ணதாசன் பட்டங்களை வழங்கி பேசியதாவது:
புதிதாக பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நாட்டுப்பற்று, மனிதநேயம், பெற்றோரை மதித்தல், ஆளுமைப்பண்பு ஆகியவற்றை வளர்த்து சிறந்து மாணவர்களை உருவாக்க வேண்டும். வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தில் ஆசிரியர்களாக விளங்குகின்றவர்கள் எப்போது புத்தகம் வாசிப்பத்தை ஏற்படுத்தி அறிவை வளர்த்துக் கொண்டு சமுதாயத்தை மேம்படுத்துபவர்களாகவும், நல்ல மாணவர்களை உருவாக்குகின்ற சிற்பிகளாக விளங்க வேண்டும், என்றார்.