ADDED : மார் 26, 2026 07:35 PM

அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி அருகே மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான பட்டமளிப்பு விழா நடந்தது . பள்ளி நிறுவனர் ராஜு, தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தனர். முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.
பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் மழலையர்களுக்கு பட்டம் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் செய்தனர்.
