/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குறிச்சியில் தாமதமாக துவங்கிய கிராம சபை கூட்டம்
/
கல்குறிச்சியில் தாமதமாக துவங்கிய கிராம சபை கூட்டம்
கல்குறிச்சியில் தாமதமாக துவங்கிய கிராம சபை கூட்டம்
கல்குறிச்சியில் தாமதமாக துவங்கிய கிராம சபை கூட்டம்
ADDED : நவ 02, 2025 04:27 AM
காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியில் துணை பி.டி.ஓ.வை கண்டித்து, கிராம சபை கூட்டத்திற்கு மக்கள் வராமல் புறக்கணித்தனர். அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, தாமதமாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து முடித்தனர்.
காரியாபட்டி கல்குறிச்சியில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 10:00மணிக்கு நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தில் துணை பி . டி .ஓ ., மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
பின், மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து குறைவானோர் பங்கேற்க முன் வந்த நிலையில் போதிய மக்கள் இல்லாததால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கூட்டத்தில் அமர வைத்து தீர்மானங்களை நிறைவேற்றினர். அதற்குப் பின் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர்.

