ADDED : செப் 09, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மூத்தோர் நல சங்கம் சார்பில் தாத்தா, பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
பொருளாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பங்கேற்ற தாத்தா பாட்டிகளுக்கு பேரன் பேத்திகள் பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பேரன் பேத்திகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் பெத்து ராஜா, செயலாளர் தேவராஜா, பொருளாளர் முத்துராமலிங்கம் தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர். உறுப்பினர் லட்சுமி நன்றி கூறினார்.