தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வழிகாட்டுதல் கருத்தரங்கு

வழிகாட்டுதல் கருத்தரங்கு

வழிகாட்டுதல் கருத்தரங்கு


ADDED : டிச 16, 2024 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது.

மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நடந்த கண்காட்சியை ஆர்.டி.ஓ ., வள்ளிக்கண்ணு திறந்து வைத்தார். மத்திய மாநில அரசு போட்டி தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் கல்லூரி படிப்பிற்கு பின் உயர்கல்வி குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் மாணவர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. மாணவர்களின் உயர்கல்வி, சுய வேலைவாய்ப்பு, அரசு வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

முதல்வர் அந்தோணி டேவிட் நாதன், ஆதிதிராவிடர்கள் பழங்குடியினருக்காண வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சரவண கணேஷ், வேலை வாய்ப்பு அலுவலர்கள் ஞானப்பிரபா, பிரியதர்ஷினி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us