ADDED : செப் 27, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசியில் கொலை, அடிதடி வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மெய்யண்ணன் 23. இவர் மீது போலீஸ் ஸ்டேஷன் களில் கொலை அடிதடி வழக்குகள் உள்ளது. இந்நிலையில் எஸ்.பி., கௌதம் கோயில் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஷரண்யா அறி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி மெய்யண்ணன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
