ADDED : ஜூன் 20, 2026 11:07 PM
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ.2000 குறைந்து ரூ.22,000 முதல் ரூ.26,000 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.3300, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6435, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.10 குறைந்து ரூ.2340, ரவை 30 கிலோ ரூ.1530, மைதா 90 கிலோ ரூ.4700, சர்க்கரை 50 கிலோ ரூ.2220, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.4400, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.6700 என விற்கப்படுகிறது.
துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.10,700 முதல் ரூ.11,000, உளுந்து நாடு 100 கிலோ ரூ.7300 முதல் ரூ.7500, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9900, உளுந்து லயன் 100 கிலோ ரூ.8200 முதல் ரூ.8700, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4800 முதல் ரூ.4950, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.10,400 முதல் ரூ.10,600 என விற்கப்படுகிறது.
பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7800 முதல் ரூ.8000, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9150 முதல் ரூ.9300, மல்லி லயன் 40 கிலோ ரூ.6100, மல்லி நாடு 40 கிலோ ரூ.6000 முதல் ரூ.6500, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.18,000 முதல் ரூ.25,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.5900, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.2900 என விற்பனை செய்யப்படுகிறது.
