ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள ஜிம், நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம் ஆக மாற்றி அமைக்கப்பட்டு ஆக. 30 முதல் மக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.
செப். 1 முதல் உறுப்பினர் சந்தா கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ.525, 3 மாதங்களுக்கு ரூ.1260, 6 மாதங்களுக்கு ரூ.2310, ஓராண்டுக்கு ரூ.4410 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளரைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் இதை பயன்படுத்தும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையில் 50 சதவீதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.
