/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை
/
நரிக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை
ADDED : மே 17, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பாத்திரங்களில் சேகரித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நரிக்குடி பகுதியில் சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. மக்கள் வெளியில் தலை காட்ட முடியவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியதையடுத்து மழை வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மழையுடன் ஆலங்கட்டி விழுந்தது. ஆலங்கட்டியை மக்கள் பாத்திரங்களில் சேகரித்தனர்.
கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு மழை பெய்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.