/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை எரிப்பால் சுகாதார சீர்கேடு
/
குப்பை எரிப்பால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 28, 2025 05:22 AM

விருதுநகர்: விருதுநகர் - சிவகாசி நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே நீரோடையில் குப்பை எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நகரில் நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகி்றது. இதனால் நீராதாரம் பாதிக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் விருதுநகர் - சிவகாசி நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே நீரோடையில் குவிந்துள்ள குப்பையை எரிப்பதால் நீர் மாசுடன் காற்றுமாசும் அதிகரித்து காணப்படுகிறது. அப்பகுதி முழுதும் புகை சூழ்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையுள்ளது.
அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. நகராட்சி நிர்வாகிகள் பொது இடங்களில் குப்பை எரிப்பதையும், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும். திடக்கழிவுகளை அப்புறப்படுத்த முறையான திட்டம் வகுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

