UPDATED : மே 23, 2026 11:24 PM
ADDED : மே 23, 2026 11:21 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துாரில் பலத்த சூறாவளியடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சாத்துாரில் காலை முதல் மாலை 4:30 மணிவரை கடும் கோடை வெயில் வெளுத்து வாங்கியது. மாலை 4:45 மணிக்கு சாரலுடன் துவங்கிய மழை சிறிது நேரத்தில் சூறாவளியுடன் இடி மின்னலாக பெய்யத் துவங்கியது. சாத்துார் சடையம்பட்டி சத்திரப்பட்டி வெங்கடாசலபுரம் மேட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. நேற்று மாலை 6 : 00 மணிக்கு மீண்டும்சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல் காணப்பட்டதால் மக்கள் நடமாட்டம் முடங்கியது.
இதனால் நகர், கிராம பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
