/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் இடி மின்னலுடன் பலத்த மழை
/
சாத்துாரில் இடி மின்னலுடன் பலத்த மழை
ADDED : ஆக 05, 2025 05:20 AM
சாத்துார் : சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சாத்துார் படந்தால் வன்னிமடை நென்மேனி சத்திரப் பட்டி சடையம்பட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிரமங்களில் நேற்று மாலை 4:00 மணி முதல் பலத்த காற்று இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் உயரழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின்தடை பட்டது.
மாலை 5:30 மணிக்கு முற்றிலுமாக மழை பெய்து நின்ற பின்னரே மின்சார வாரியத்தினர் பழுது சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் ஒடிந்து கிடந்ததாலும் உயர் அழுத்த மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டிருந்ததாலும் உடனடியாக மின் சப்ளை வழங்க முடியவில்லை.
இதனால் கிராம பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மாலை 6:00 மணிக்கு பிறகு படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக சரி செய்து மின்சாரம் வழங்கப்பட்டது.
திடீர் என பெய்த மழையால் சாத்துார் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிரம்பியது.மெயின் ரோட்டில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். விருதுநகரில் மாலை 4:30 மணி முதல் அரை மணி நேரம் பெய்தது.