தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'ஹைடெக்' முறையில் கொள்ளையர்கள்

 'ஹைடெக்' முறையில் கொள்ளையர்கள்

 'ஹைடெக்' முறையில் கொள்ளையர்கள்


ADDED : பிப் 06, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் ஹைடெக் முறையில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை யடிப்பதால் மக்கள் உஷாராக இருப்பதுடன் போலீசாரின் இரவு நேர ஓங்கும் அவசியமாகிறது.

அருப்புக்கோட்டையில் பல பகுதிகளில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து நகைகள் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கடந்த 4 நாட் களுக்கு முன்பு பாலையம் பட்டி பகுதியில் பூட்டிய வீட்டில் 50 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொள்ளையர்கள் நவீன வசதிகளை கொள்ளையடிக்க பயன்படுத்துகின்றனர். இவர் களுடன் தொடர்பு உள்ள ஒருவர் நகரில் பல பகுதிகளுக்குச் சென்று பூட்டிய வீடுகளை கண்காணிக்கின்றார்.

தொடர்ந்து வீடு பூட்டப்பட்டு இருந்தால், பூட்டிய வீட்டை அலைபேசியில் படம் எடுத்து கொள்ளை யர்களுக்கு அனுப்பு கின்றார். மேலும், வீட்டிற்கு வர கூடிய வழிகளையும் குறிப்பிட்டு அலை பேசியின் வாட்ஸ் ஆப்ல், பதிவிடுகிறார். இதனால் கொள்ளையர்கள் எளிதாக குறிப்பிட்ட வீட்டில் புகுந்து கொள்ளையடித்து செல்கின்றனர்.

வீட்டை பூட்டி விட்டு செல்பவர்கள் அக்கம் பக்கத்து வீடுகள் அல்லது தங்கள் உறவினர்களிடம் சொல்லி வீட்டை பார்த்து கொள்ளச் சொல்ல வேண்டும். அருகில் உள்ள போலீஸ் ஸ்டே ஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும். நகைகள் விலை உயர்ந்த பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் நகர், புறநகர் பகுதிகளில் போலீசாரின் இரவு நேர ரோந்து பணி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப் பாகவும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us