தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குவாரிகளுக்கு செல்லும் அதிக திறன்கள் கொண்ட வெடி மருந்துகள். கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குவாரிகளுக்கு செல்லும் அதிக திறன்கள் கொண்ட வெடி மருந்துகள். கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குவாரிகளுக்கு செல்லும் அதிக திறன்கள் கொண்ட வெடி மருந்துகள். கண்டுகொள்ளாத அதிகாரிகள்


UPDATED : நவ 19, 2026 04:42 PM

ADDED : நவ 19, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 04:42 PM ADDED : நவ 19, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: திருச்சுழி பகுதிகளில் செயல்படும் குவாரிகளுக்கு விதிமுறைகளை மீறி அதிக திறன் கொண்ட வெடி மருந்துகள் அருப்புக்கோட்டை வழியாக வாகனங்களில் செல்வதை அரசு துறைகள் கண்டு கொள்ளாததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன.. இவற்றில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்தில் வெடி வைக்கவும், மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும், பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட அழுத்தத்தில் வெடிகளை வைக்க வேண்டும். இவற்றை வெடி மருந்து துறை, கனிம வளம், வருவாய், போலீஸ் உள்ளிட்ட துறைகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்..

ஆனால் அதிக அழுத்தத்தில் வெடிகளை வெடிக்க செய்வதும், அளவுக்கு அதிகமாக டன் கணக்கில் கற்களை ஏற்றி செல்வதும் உள்ளிட்ட பல விதி மீறல்கள் தொடர்ந்து நடக்கிறது. அதிக அழுத்தத்தில் பாறைகளை வெடி வைத்து தகர்க்க வெளியூர்களிலிருந்து விதிகளை மீறி வெடி மருந்து வாகனங்கள் திருச்சுழி குவாரிகளுக்கு வருகின்றன.

அக். 23 ல், சேலத்திலிருந்து 2 டன்னிற்கு குறையாத அதிக அழுத்தம் உள்ள வெடி மருந்துகள் இரவில் புறப்பட்டு, காலை 7:00 மணிக்கு அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் வந்த போது போலீசார் பிடித்தனர். பல மணி நேரத்திற்கு லாரி விடுவிக்கப்பட்டது.

வெடி மருந்து சட்டத்தின்படி, சூரியன் உதித்த பின்பும், மறைவதற்குள் தான் வெடி மருந்து வாகனங்களை இயக்க வேண்டும். அதிகபட்சம் 200 கி.மீ., தூரம் வரை தான் செல்ல வேண்டும். உள்ளிட்ட கட்டாய விதிகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றாமல், சேலத்தில் இருந்து இரவு புறப்பட்டு ராமநாதபுரம் செல்ல வேண்டிய வாகனம் அருப்புக்கோட்டை வழியாக வந்தது போன்ற விதி மீறல்கள் இருந்தும் வாகனத்தை போலீசார் ஆவணங்கள் சரியாக உள்ளது என விடுவித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காரியாபட்டியில் அதிக திறன் கொண்ட வெடி மருந்து பொருட்களை ஏற்றி வந்த 2 வேன்களை ஓசியூ ., பிரிவு போலீசார் பிடித்தனர். அதில் 5 டன் வெடி மருந்துகள் இருந்துள்ளது. இதே போன்று அதிக திறன் கொண்ட வெடி மருந்து பொருட்கள் குவாரிகளுக்கு தொடர்ந்து செல்கிறது. விதிமீறல்கள் எதையும் அரசு துறைகள் கண்டு கொள்வது இல்லை.

மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதற்கு முன்பு, தமிழக அரசு பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும் மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us