/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயருது துவரம் பருப்பு உருட்டு உளுந்தம் பருப்பு விலை
/
உயருது துவரம் பருப்பு உருட்டு உளுந்தம் பருப்பு விலை
உயருது துவரம் பருப்பு உருட்டு உளுந்தம் பருப்பு விலை
உயருது துவரம் பருப்பு உருட்டு உளுந்தம் பருப்பு விலை
ADDED : மே 18, 2025 04:35 AM
விருதுநகர்: விருதுநகர் மார்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 400 உயர்ந்து ரூ.10,500 முதல் ரூ.10,800, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.10,900 என விற்கப்படுகிறது.
இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2500, ந.எண்ணெய் ரூ.5775, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.2000, சர்க்கரை 50 கிலோ ரூ.2220, மைதா 90 கிலோ ரூ.4590, ரவை 30 கிலோ ரூ.1520, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.6400, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.140 குறைந்து ரூ.4300 என விற்கப்படுகிறது.
பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.50 குறைந்து ரூ.9300 முதல் ரூ.9450, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.9100, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.8100 முதல் ரூ.8200, உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.7100 முதல் ரூ.7200, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.4600, பாசிப்பயறு லயன் மீடியம் ரூ.6700 முதல் ரூ.6900 என விற்பனை செய்யப்படுகிறது.
மல்லி லயன் 40 கிலோ ரூ.3450 முதல் ரூ.3600, மல்லி நாடு ரூ.3500 முதல் ரூ.4300, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.8000 முதல் ரூ. 14,000, வத்தல் நாடு புதுசு ரூ.8000 முதல் ரூ.10,000, குண்டூர் வத்தல் ரூ.11,000 முதல் ரூ.13,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.4200, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.1800 என விற்பனை செய்யப்படுகிறது.