ADDED : ஏப் 29, 2026 02:57 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிவேகத்தில் பறக்கும் டிராக்டர்களால் ரோட்டில் நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
நகரில் பல்வேறு இடங்களில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு மண், மணல், செங்கல் மற்றும் கட்டுமான பொருட்களும், பல்வேறு விவசாய விளை பொருள்களும் டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகிறது.
அதிக லோடுடன் செல்லும் டிராக்டர்கள் நகர் பஜார் வீதி பகுதிகளில் மெதுவாக செல்வதில்லை. அதிவேகத்தில் செல்கிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்லும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் டூவீலர்களில் வருபவர்களையும் அச்சப்பட வைக்கும் வகையில் டிராக்டர்கள் அதிவேகத்தில் வருவதால் வாகன ஓட்டிகளும் விபத்திற்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது.
எனவே, இதனை தடுக்க டிராக்டர்களை ஓட்டி வருபவர்களிடம் டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா என்பது குறித்து போலீசார் வாகன தணிக்கை செய்து வேகமாக செல்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
