ADDED : ஜூன் 24, 2026 12:55 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கட்டுமான பொருட்கள், விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் டிராக்டர்கள் அதிவேகத்தில் செல்வதால் நடந்து செல்லும் மக்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இவற்றிற்கு ஜல்லிகள், செங்கல்கள், எம்.சாண்ட் கொண்டு செல்லும் டிராக்டர்கள் அதிகாலை நேரம் முதலே அதிவேகமாக செல்கிறது. இதேபோல் விவசாய பொருட்கள் கொண்டு செல்லும் டிராக்டர்களும் அதிவேகத்தில் செல்கிறது.
இதனை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு எந்தவித சிக்னலும் செய்யாமல் திரும்புகின்றனர்.
இதனால் ரோட்டை கடந்து செல்லும் சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உருவாகி வருகிறது.
எனவே, அதிவேகத்தில் செல்லும் டிராக்டர்களை நிறுத்தி அதனை ஓட்டி செல்பவர்களிடம் டிரைவிங் லைசன்ஸ் உள்ளதா, வண்டிகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என போலீசார் சோதனை செய்து, டிராக்டர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
