/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்கு
/
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்கு
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்கு
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்கு
ADDED : மே 13, 2025 06:49 AM
நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் இருளாக இருப்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது. இருக்கும் உயர் கோபுர மின் விளக்கும் 10 நாட்களாக எரியவில்லை. மழையின் போது இடி, மின்னலுக்கு உயர் கோபுர மின்விளக்குகள் அடிக்கடி பழுதாகின. அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மே 1ல் மீண்டும் பழுதடைந்து எரியாமல் போனது. 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சரி செய்யவில்லை. தற்போது இருளாக இருப்பதால் பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
இரவு 11:00 மணி வரை பஸ் வசதி இருப்பதால் பயணிகளின் நடமாட்டம் இருக்கும். இருளாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக சரி செய்து, எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.