தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விபத்திற்கு காரணமாகும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு

 விபத்திற்கு காரணமாகும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு

 விபத்திற்கு காரணமாகும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு


ADDED : பிப் 01, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தடையற்ற போக்குவரத்திற்கு வித்திடும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் என்பது அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டிலும் ஜனவரி மாதத்தை சாலை பாதுகாப்பு மாதமாக மத்திய அரசு அனுசரிக்கிறது.

இந்நிலையில் விபத்துக்கு காரணமாக உள்ள சாலையோர அகற்றப்படாத வாகனங்கள், கடைகளின் முன் பகுதி வரை நீட்டியுள்ள விளம்பர போர்டுகள், அறிவிப்பு பலகைகள், நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வது போன்றவை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விபத்துக்கள் குறைக்கப்படுவது தான் இதன் நோக்கம்.

ஆனால் ராஜபாளையம் நகர் பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து காந்தி சிலை ரவுண்டானா வரையும், தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கலை மன்றம் வரை உள்ள நெடுஞ்சாலை இரண்டு பக்கமும் கடைகளில் அறிவிப்பு பலகைகள் ரோட்டை ஆக்கிரமிக்கின்றன.

இது தவிர ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ள லோடு வேன் பசுமையாக கொடிகள் படர்ந்து பந்தலாக மாறிவிட்டது. போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே உள்ள இது போன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றுவதே தடையற்ற பயணத்திற்கு சாத்தியம் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us