/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் பூஜாரிகள் மீது ஹிந்து முன்னணி புகார்
/
ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் பூஜாரிகள் மீது ஹிந்து முன்னணி புகார்
ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் பூஜாரிகள் மீது ஹிந்து முன்னணி புகார்
ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் பூஜாரிகள் மீது ஹிந்து முன்னணி புகார்
ADDED : ஜூன் 26, 2025 12:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பணி நேரத்தில் மதுபோதையில் இருந்த பூஜாரி சுந்தர், அலைபேசி வீடியோ ஒன்றில் ஆபாச நடனமாடிய உதவி பூஜாரி கோமதி நாயகம் உள்ளிட்ட பூஜாரிகள், மது அருந்திய கோயில் ஊழியர் கார்த்திக் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஹிந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.
இக்கோயிலில் தற்காலிக உதவி பூஜாரியாக பணியாற்றும் கோமு உட்பட சில பூஜாரிகள் ஆபாச நடனமாடிய வீடியோ வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து டவுன் போலீசார் நேற்று முன்தினம் விசாரித்தனர்.
இந்நிலையில் ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் யுவராஜ், கோயில் தக்கார் சக்கரையம்மாளிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், ஜூன் 15ல் பூஜாரி சுந்தர் பணி நேரத்தில் மதுபோதையில் இருந்துள்ளார்.
தற்போது உதவி பூஜாரி கோமு உட்பட சில பூஜாரிகள் ஆபாச நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது. கோயில் ஊழியர் ஒருவரும் பணி நேரத்தில் மது அருந்துகிறார். மேலும் தனிநபர்கள் டிரஸ்ட் அமைத்து கோயில் பெயரில் பணம் வசூலிக்கின்றனர் இவர்களை கோயிலில் இருந்து வெளியேற்றி சஸ்பெண்ட் செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கூறுகையில், புகார்களுக்கு ஆளான பூஜாரிகள் கோயிலுக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு பூஜாரி சுந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் ஊழியர் குறித்து இதுவரை என்னிடம் புகார் வரவில்லை. வரும் பட்சத்தில் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
அர்ச்சகருக்கு அடி; கைது 2
இதுகுறித்த விசாரணைக்கு நேற்று மதியம் 12:15 மணிக்கு ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு உதவி பூஜாரி கோமதி நாயகம் வந்த போது, அவரை மேட்டுத்தெருவை சேர்ந்த காளிராஜ், பழனிக்குமார் கன்னத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். கோமதி நாயகம் புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.