UPDATED : செப் 22, 2026 08:18 PM
ADDED : செப் 22, 2026 04:23 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என கூறியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் நேற்று காலை நடந்தது.
இதில் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், ஆர்.எஸ். எஸ். கோட்டத் தலைவர் சிவலிங்கம், பா.ஜனதா மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரை, கிழக்கு மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் வெங்கடசாமி பங்கேற்று பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
எஸ்.பி.கவுதம்கோயல் தலைமையில் டி.எஸ்.பி.பாலசந்திரன், 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
